மறுமுனையில் மருத்துவர், "ஹாய் கவிநா, எப்படி இருக்க? நான் இன்னிக்கு வீட்டுக்கு வரலாமா? என்கூட ஒருத்தர் வராங்க. அவங்க பெயர் செல்வி ரதி, ‘இன்றைய இளையர்கள்’ பத்திரிக்கையில் வேலை பார்க்கிறார். காதலர் தினத்தை முன்னிட்டி உங்கள பத்தி...” என்றவர் முழுவதையும் சொல்லி முடித்தார்.
சற்று யோசனைக்கு பிறகு கவிநா, "கண்டிப்பா, வாங்க அங்கிள்."
மருத்துவர், "கிரீஷ் ,இப்ப பரவாயில்லையா?" என்று வினாவினார்.
மாலை மணி 7. சோபாவிலுள்ள அலங்கார பொருட்களைச் சரிசெய்தாள். "வாங்க அங்கிள், வாங்க...." வரவேற்றாள் கவிநா. பின்னாடியே பத்திரிக்கையாளர் ரதியும் வந்தார். முதன் முறையாக சந்திப்பதால், ரதியும் கவிநாவும் கை குலுக்கி கொண்டனர். கிரீஷ் இருக்கிறானா என்று சுற்றுபுரத்தை ஒரு முறை நன்கு பார்த்தபடி மருத்துவர், “எங்க கிரீஷ்?"
வெளியே சென்றுவந்ததால் களைப்பாக உள்ளதாக சொல்லிவிட்டு உறங்கி கொண்டிருக்கிறான் கிரீஷ் என்ற விஷயத்தை கூறினாள் கவிநா. மூவரும் சோபாவில் உட்கார்ந்தனர். "எங்க பத்திரிக்கையில இந்த மாதத்தில ஒரு சிறப்பு கட்டுரை ஒன்னு போடுறோம். வித்தியாசமான தம்பதிகளை பத்தி. அதான் உங்கள பத்தி எழுதலாமேன்னு வந்தேன். கவலை வேண்டாம், உங்க பெயர்கள் எல்லாம் ரகசியமாய் இருக்கும். பெயர்களை வெளியிட மாட்டோம்," என்றார் ரதி. பேசி கொண்டே தனது பையிலிருந்த பேனாவை எடுத்தார்.
"உங்கள பத்தி... கிரீஷ பத்தி....?" நேரடியாக கேள்வியை கேட்க ஆரம்பித்தார் ரதி.

" கிரீஷுக்கு அக்கியூட் சிஸ்சோஃர்னியா டிஸ்சார்டர்(acute schizophrenia disorder)," தழுதழுத்த குரலில் கவிநா."இது எப்படி? கேள்விப்படாத ஒரு டிஸ்சார்டர் மாதிரி இருக்கு. ஏன்? என்ன ஆச்சு அவருக்கு?" ரதி தனது பேனாவிற்கும் தாட்களுக்கும் வேலை வைத்தார்.
"இந்த குறைபாடு உலக ஜன தொகையில 1% மேல் இருக்கு. அமெரிக்காவுல மட்டும் 2.7 மில்லியன் மக்களுக்கு இந்த குறைபாடு இருக்கு. ஏன் எப்படின்னு சரியான ஒரு குறிப்பிட்ட காரணம் சொல்ல முடியாது. மூளையின் பாதிப்பு, சின்ன வயசுல சரியான ஊட்டசத்து இல்லாதது, மனம் உளைச்சல் -இப்படி பல காரணங்கள் இருக்கலாம," என்று விளக்கினார் மருத்துவர் ரவிராஜ்.
அவர் தொடர்ந்து, " இப்படி உள்ளவங்களுக்கு பேசும் முறை, பாணி, சிந்தனை, அதை வெளிபடுத்தும் விதம்- இப்படி நிறைய வகையில பாதிப்பு இருக்கும். சில சமயங்களில் ஞாபக மறதி கூட வரும். ரொம்ப நேரத்துக்கு அவங்க அவங்களாவே இருக்க மாட்டாங்க. ஆனா, கொஞ்ச நேரம் கழிச்சு சரியா போயிடும்."
"ஒரு விஷயம் நடந்த மாதிரி பேசுவாங்க. இன்னிக்கு பாருங்க ஞாயிற்றுகிழமை. தபால்காரன் வந்துட்டு போனார்னு சொன்னார் கிரீஷ். திடீரென்னு யாரோ மூளைக்குள்ள வந்த மாதிரி அவங்களிடம் பேசிகிட்டு இருப்பாரு. இன்னிக்குகூட வெளியே போகும்போது அப்படி இருந்தாரு. கொஞ்சம் பயமாகவும் இருக்கும் ஆனா பாவமாகவும் இருக்கும்." என்று கவிநா சொல்ல சொல்ல, அவள் கண்கள் சற்றே குளமாகின."மருந்தால இத குணப்படுத்த முடியுமா டாக்டர்?" ரதி அடுத்த கேள்வியை வீசினார்.
"இதற்கு முழுமையான தீர்வு கிடையாது. ஆனா, பாதிப்பு அளவை குறைக்க முடியும். கிரீஷ்கூட முன்பு ரொம்ப முரட்டுத்தனமா நடந்துப்பார். ரொம்ப நேரம் கத்துவார். கோபம்கூட ரொம்ப நேரத்துக்கு நீடிக்கும். இப்போ மருந்து சாப்பிடுறாரு. அதனால இப்ப ரொம்ப மாறிகிட்டு வறார்.” ரதியைப் பார்த்தார் கூறினார் மருத்துவர்.
"ஆமா அங்கிள், இப்போ பரவாயில்லை. நீங்க
கொடுத்த மருந்துகளை, சாதாரண ஊட்டச்சத்து மாத்திரைனு சொல்லி கிரீஷ்கிட்ட கொடுத்துட்டு வறேன். நிறைய மாற்றம் இருக்கு..." நன்றியுணர்வுடன் கவிநா.
"இப்படி ஒருவரை கல்யாண பண்ணிக்க...." கேள்வியை கேட்கலாமா இல்லை வேண்டாமா என்ற ஒரு தோரணையில் இழுத்தார் ரதி. புரிந்து கொண்ட கவிநா,
"மூனு வருஷ காதல். எப்படிங்க அப்படியே விட்டுட முடியும். இந்த ஒரு காரணத்துனால அவர வேண்டாம்னு சொல்ல எனக்கு மனசு வரல. கல்லூரி முதல் ரெண்டு வருஷம் அவர் நல்லா தான் இருந்தார். அதுக்கு அப்பரம் தான் மூணாவது வருஷம் தான் எனக்கு தெரிய வந்துச்சு...""தனக்கு இப்படி ஒரு குறைப்பாடு இருக்குன்னு கிரீஷுக்கு...." கேள்வியை ரதி முடிப்பதற்குள்,
கவிநா முடித்தாள்- "கிரீஷுக்கு தெரியாது!"
மருத்துவர், "பொதுவா இந்த டிஸார்டர் உள்ளவங்களுக்கு, தான் இப்படி பாதிக்கப்பட்டிருக்கிறோம்ன்னு தெரியாது," என விளக்கினார். அவர் சொல்வதை வேகமாய் தாளில் கிறுக்கினாள் ரதி. "முழு நேரமும் அவர்கூடவே இருக்கனுமே கஷ்டமா இல்லையா? நீங்க வேலைக்கு போகும்போது எப்படி?"
குளமாகிய கண்களை துடைத்தவாறு கவிநா, "அவர்கூட இருக்கறது தான் எனக்கு சந்தோஷம். அவரை முழு நேரம் கவனிக்க வேணும் என்பதால், நான் இரவு வேலை பாக்குறேன். ராத்திரி 9 மணிக்கு எல்லாம் தூங்க வச்சுடுவேன் கிரீஷை. அதுக்கு அப்பரம் தான் வேலைக்கு கிளம்புவேன்."
மருத்தவர் சொன்னவற்றையும் கவிநா சொன்னவற்றையும் ரதி வேகமாய் குறிப்பு எடுத்துக் கொண்டார்.
கவிநா, "கிரீஷுக்கும் வேலைக்கு போகனும்னு ஆசை தான். ஆனா, அவரால மத்தவங்ககிட்ட வேலை பாக்க முடியல.
அதான் நேரம் கிடைக்கும்போது புகைப்படம் எடுப்பாரு. படம்கூட அழகா வரைவார் கிரீ," என்றவள் அங்கிருந்த சுவரில் இருந்த ஒரு அழகான படத்தை காட்டி,
"இது அவர் வரைஞ்ச படம் தான்." பெருமிதத்தோடு சொன்னாள்.
சிறு புன்னகையுடன் ரதி, கவிநாவை பார்த்து, "நீங்க ரொம்ப வித்தியாசமானவர்."
"ரொம்ப நன்றி டாக்டர். ரொம்ப நன்றி கவிநா. ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள பார்த்ததில் " கவிநாவும் ரதியும் கைகுலுக்கி கொண்டனர். ரதி விடைபெற்றுக் கொண்டாள். டாக்டர் கிளம்பும் முன்,
"கிரீஷ பாத்துக்கோ. மாற்றம் தெரிஞ்சாலும்,ஜாக்கிரதையா இரு கவிநா.எந்த ஒரு சீரியஸான விஷயம் அவன பாத்திகாத அளவில் பார்த்துக்கோ .ஏதாவுதுன்னா எனக்கு உடனே ஃபோன் பண்ணு," அக்கறையுடன் சொன்னார்.
இரவு வேலைக்கு கிளம்பும் நேரம் வந்தது. கவிநா வேலைக்குக் கிளம்பும்முன், கிரீஷ் உறங்கி கொண்டு தான் இருக்கிறானா என்பதை ஒரு முறை அறை கதவை திறந்து பார்த்து உறுதி செய்து கொண்டாள். தனது வேலை இடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தாள். அப்போது இரவு மணி 11.00

அவளது கைபேசி மணி ஒலித்தது.மறுமுனையில் கிரீஷ்,
"கவிநாஆஆஆஆஆஆ!!!" என்று அலறினான். அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அவன் தொலைபேசியின் தொடர்பை துண்டித்தான்.
No comments:
Post a Comment